ஜனநாயகன் ' தளபதி கச்சேரி' லிரிக்ஸ் - பாடல் வரிகள்

ஜனநாயகன் ' தளபதி கச்சேரி' லிரிக்ஸ்  - பாடல் வரிகள்




'எங்க அண்ணன் 'வி' கச்சேரி

தளபதி கச்சேரி...(2)

ஐஸா அங்க கொஞ்சம் பாரு அண்ணனோட பேரு

ஜொலிக்குது டா

ஸ்லோமோ தெறிக்குது டா...

நண்பா நண்பி செல்லம் கேளு

நம்பிக்கையா சேரு

இருக்குதுடா காலம் பொறக்குது டா


தனக்குனு வாழாத

நீ தரத்துல தாழாத

ஒருத்தனும் வாரானே

திருத்திட போறானே

தங்கமே தளபதி ப்ளாஸ்டு ப்ளாஸ்டு


எங்கண்ணன் வி கச்சேரி

தளபதி கச்சேரி


வாங்கனா வணங்கன்னா

வெறித்தனமா வைப் ஆகலாமா

எங்கண்ணன் வி கச்சேரி

தளபதி கச்சேரி

கொடிய பறக்கவிட்டு விருந்து வச்சு கொண்டாடலாமா

பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா

பகுலு பிஜ்ஜா பிஜ்ஜா ரே (4)


ஹே பட்டி ஆர் யூ ரெடி

தெறிக்கட்டும் சரவெடி 

பறக்கட்டு நம்ம கொடி

வரும் தடைகளுக்கெல்லாம் தொடை நடுங்கிட

ஸ்டெடி , ஸ்மைல் பட்டி


தீப்பொறி இரு விழி

நீ பதி , புழு வழி

வரும் தலைமுறையெல்லாம் தளபதி பேர சொல்ல

தளபதிக்கு இந்த பாட்டு

நம்ம அண்ணன் போல யாரு காட்டு (2)

 


ஹே ஒரு மாபெரு நாடு

அதன் வேர்களில் நம்ம வியர்வை பாரு

மரம் மேல் ஒரு கூடு

அதன் தாய்வழி சொந்தம் இந்த காடு

ஆவோ டூகெதர் பையா பையா

சாதி பேதம் எல்லா லேதய்யா

விங்கல் சினேகம் போல் மண்ணில் எங்கும் 

அண்ணன் கண்டில்லா ஓ செய்யா

ஹே ஒருத்தனும் வாறானே


திருத்திட போறானே

தங்கமே தளபதி 

ப்ளாஸ்டு ப்ளாஸ்டு

எங்கண்ணன் வி கச்சேரி

தளபதி கச்சேரி

வாங்கனா வணங்கன்னா

வெறித்தனமா வைப் ஆகலாமா

எங்கண்ணன் வி கச்சேரி

தளபதி கச்சேரி

கொடிய பறக்கவிட்டு விருந்து வச்சு கொண்டாடலாமா

தளபதிக்கு இந்த பாட்டு

நம்ம அண்ணன் போல யாரு காட்டு (2)


#jananayagan



மயக்கமா கலக்கமா-   சுமைதாங்கி

மயக்கமா கலக்கமா- சுமைதாங்கி

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு

நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா..

ஆஸ்கருக்குச் செல்லும் ‘விசாரணை’ படம். முன்பே கணித்த ரஜினி.

ஆஸ்கருக்குச் செல்லும் ‘விசாரணை’! தமிழ்மொழிப் படத்துக்குக் கிடைக்கப்போகும் சர்வதேச மரியாதை!!





சினிமா உலகில் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் ‘ஆஸ்கர்’ விருதுக்கு இந்தியாவின் சார்பில், கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற ‘விசாரணை’ படம் இந்தியாவின் சார்பில் அனுப்பப்படவிருக்கிறது. போட்டிக்குச் செல்லும் பட்டியலில் ‘உட்தா பஞ்சாப்’, ‘சாய்ரத்’,‘விசாரணை’படங்களில் நடுவர் குழுவினர் ‘விசாரணை’ படத்தைத் தேர்வு செய்துள்ளனர்

பல்வேறு மொழிப்படங்கள் கொண்டாடப்படும் நம் தேசத்தில், ஒரு தமிழ்ப்படத்துக்குக் கிடைக்கவிருக்கும் சர்வதேச மரியாதை இது.

உலக நாயகன் செவாலியே கமல் ஹாஸன் நடித்த ஹேராம் படத்திற்கு பிறகு ஆஸ்கருக்கு செல்லும் தமிழ் படம் விசாரணை

வாழ்த்துக்கள் இயக்குநர் வெற்றிமாறன் - தனுஷ்


இந்நிலையில் விசாரணை ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறித்து ரஜினி அப்பொழுதே கூறினார் என்கிறார்கள் அவர் ரசிகர்கள். என்னது, ரஜினி சொன்னாரா? இது எப்போப்பா நடந்தது என்று கேட்டால் இந்த ட்வீட்டை பதிலாக அளிக்கிறார்கள்.

Rajinikanth (@superstarrajini)

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு





மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார்.


பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 4,300 வீரர், வீராங்கனைகள் 23 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார். அவருடன் பாடி வருண் சிங் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தையும் வென்றார்


பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்த வீரர்களுக்கு வாழ்த்துகள்...

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - சூரியகாந்தி

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - சூரியகாந்தி

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது 
கருடா சௌக்கியமா..
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. 
கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது.. 

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது 
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. 
கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது.. 

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது 
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. 
கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது.. 

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது 
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. 
கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது.. 

படம் : சூரியகாந்தி
இசை : MS விஸ்வநாதன்
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்
ஆறு மனமே ஆறு - ஆண்டவன் கட்டளை

ஆறு மனமே ஆறு - ஆண்டவன் கட்டளை

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துனபத்தில் இன்பம் பட்டாகும்
சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துனபத்தில் இன்பம் பட்டாகும் - இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு அந்த  ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த  ஆண்டவன் கட்டளை ஆறு

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிட்ம் மயங்கும் - நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிட்ம் மயங்கும் - நிலை உயரும்போது பணிவு கொண்டால்  உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும் பணிவு என்பது பண்பாகும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும் பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நனமையை உண்டாகும்

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் - இதில்
மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆறு மனமே ஆறு அந்த  ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்- நெஞ்சில் ஓரு ஆலயம் ...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்- நெஞ்சில் ஓரு ஆலயம் ...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

(நினைப்பதெல்லாம்)

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

(நினைப்பதெல்லாம்)

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

(நினைப்பதெல்லாம்)

Google Search